Pariah
எனது புரிதல் இது காறும் பறை என்ற தாள வாத்தியத்தை இசைக்கும் அல்லது முன்னாளில் இசைத்த நபர்களையும் அவர்கள் சார்ந்த சமூகத்தையும் குறிக்கும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் இணைய தளத்தில் ஓர் கட்டுரையை படிக்கும் பொழுது "pariah" என்ற வார்த்தையை கண்டேன். இதன் அர்தத்தை webster-ல் காணும் போது இதன் பொருளைக் கண்டு துணுக்குற்றேன். (காண்க கீழேயுள்ள படம்)

எவ்வாறு இந்த வார்த்தை உருவாகியிருக்க வேண்டும் என்ற சிந்தனை, பல கேள்விகளை எழுப்பியது.
நிச்சயமாக எந்த ஒரு சமூகமும் தங்களை outcast என்று கூறிக் கொள்ள மாட்டார். ஆங்கிலேய அகராதி ஆக்கர்களுக்கு இச்சொல் யார் மூலம் சென்றிருக்க வேண்டும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மேல்சாதியர்களின் ஆதிக்கம் எவ்வாறு பல தளங்களில் பரவி இருந்தது என்பது தெரிந்தாலும், ஒரு மொழியிலிலும் (இதை இந்த விசயத்தினால் அறிவுபூர்வமானது என்பதை ஆராய்ந்துதான் ஏற்றுக் கொள்ள வேண்டும்) தங்களது ஆதிக்க மனோபாவத்தை நிறுவ வெட்கப்படாமல் இருந்துள்ளனர் என்று தெரிகின்றது.
பறையறிவிப்பவர்களைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் புறநானுற்றில் இருக்கின்றது. அக்கால தமிழ்ச் சமூகம் அவர்களுக்கு நிச்சயமாக "outcast" என்ற அடை மொழியை வழங்கவில்லை. மாறாக இயல்பான அவர்களது சீரிய பண்புகளை கண்டுணர்ந்தது. அப்பண்புகளை பாடல்கள் மூலம் நிலை நிறுத்தவும் செய்தது.
நாங்கள் இங்கு அப்பறையை கொட்டி அடித்த போது (ஒரு தமிழ் பேரவை விழாவில் தப்பாட்டத்தின் போது), பறையறிவித்தவர்களின் அவலமும் அதன் வழியே ஊடாடியதாக இன்று நான் நினைக்கின்றேன்
எப்படி ஒரு மனித சமூகம் தன்னில் இருந்து மற்றொருவரை காரணமே இல்லாமல் "outcast" என்று மற்றவர்களை சொல்ல வைக்க துணிவு பெற்றது?
-வழிப்போக்கன்
10 Comments:
அடிக்க அடிக்க
அதிரும் பறை
தலைமுறைக் கோபம்
என்ற ருத்ராவின் கவிதையினை
வாசித்திருக்கிறீர்களா..??
வழிப்போக்கனின் பயணம் சிறக்கட்டும்.
சில ஆண்டுகள்முன்னே பறை குறித்து ஒரு தமிழ்நூலொன்று வெளிவந்திருக்கின்றது. ஆறாம்திணையிலே அதன் விமர்சனம் இருந்தது. உங்களுக்குப் பயனாகலாம்.
THE ABOVE BOOK IS BY VaLaimathi
nonperson??what on earth is that?just goes to show how cruel and filthy the mindset of some of us!!
மூக்கன்: நான் படித்ததில்லை. ஆனால் விரைவில் படித்து விடுவேன். நன்றிகள்
-/: நன்றிகள் ரமணி.
ஷ்ரேயா: இந்த சமூகம் இவர்களை மனிதர்களாகவே பாவிக்கவில்லை. இவர்களுக்கு வர்ணங்களிலும் இடம் இல்லை. இவர்களை "பஞ்சமர்" என்ற சொல் மூலம் தற்காலத்தில் குறிக்கின்றனர்(ரமணீ, சரியா?). என்னடா வேதனை இது?
வாழ்க்கையோடு சேர்ந்த இசையாய்ப் பறையடித்துக் கொண்டிருந்தவனைத் தீண்டத்தகாதவனாக்கி, குலப்பெயர் கொடுத்து அந்தக் குலப் பெயரையே அவச் சொல்லாக்கியதும், பிராமணன் (brahmin) என்ற சாதீயப் பதத்தை உயர்ந்தவன் என்றாக்கிய சொல்லாடலும் கயமை, அநீதி என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்?!
Word history:
First recorded in English in 1613
Thanks Sundar: this is really important to show the comparison. Thanks for that.
Pari: Thanks !!
//இச்சொல் யார் மூலம் சென்றிருக்க வேண்டும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி//
1. சுப்ரமணிய ஸ்வாமியின் தாத்தாவுக்குத் தாத்தாவுக்கு தாத்தாவுக்கு .... தாத்தா பிரபாகரனின் தாத்தாவுக்குத் தாத்தாவுக்கு தாத்தாவுக்கு .... தாத்தாவை இந்தப்பெயரால் ( பறையா) அழைத்தது என்று ஐயந்திரிபர சமீபத்தில் (சில வருடங்களுக்கு முன்) கண்டுகொண்டேன்.
2. ஒருவரது குணாதிசயத்தை வைத்து தொழிலும், செய்யும் தொழிலை வைத்து, வர்ணாசிரமமும் வந்தன; இதில் மேல் கீழ் என்ற பாகுபாடெல்லாம் பின்னால் தான் வந்தன; இவை களையப்படவேண்டுமென ஜல்லியடிப்பவர்கள் இருக்கிறார்கள்; இருந்தார்கள்; இருப்பார்கள். விதிவிலக்குகளாய் வாய்த்த வியாசன், வால்மீகி, விஸ்வாமித்திரன் கதைகளை மூஞ்சியில் எறிவார்கள். சம்பூகன், ஏகலைவன் அடங்கிய கோடானுகோடி பறைகளை மிதித்துக்கொண்டே.
3. குணங்களை வைத்தே தொழில் எனில், பெண்கள் எல்லாம் ஒரே குணம் கொண்டவரா? சாதிகடந்து அவர்களை ஒரே தொழில் செய்யவைத்ததும், ஒரே மாதிரி சுரண்டுவதும் எப்படி?
4. அடிமைப்படுத்துவதும் சுரண்டுவதும் எல்லா இனத்துக்கும், தேசத்துக்கும் பொது. ஆனால் முக்கியமானது சுரண்டுவது தெரியாமல் சுரண்டுவது எப்படி என்பதும், புரட்சியோ மண்ணாங்கட்டியோ வந்துவிடாமல் சுரண்டுவது எப்படி என்பதுதான்.
// எப்படி ஒரு மனித சமூகம் தன்னில் இருந்து மற்றொருவரை காரணமே இல்லாமல் "outcast" என்று மற்றவர்களை சொல்ல வைக்க துணிவு பெற்றது?//
எப்படி இப்படி 'காரணமே இல்லாமல்' என்று எழுதிவிட்டீர்கள். இதுமாதிரியான பொதுப்படையான வார்த்தைகளை எழுதுவது சுரண்டுபவர்களின் மொழி. ஒவ்வொரு வார்த்தையும் மிக முக்கியமானது இல்லையா? ஏனெனில் சுரண்டப்படுவனின் மொழியில் வார்த்தைகள் குறைவு; அவன் நெடுங்காலமாக வார்த்தை மறுக்கப்பட்டவன்.
இன்னொரு பதிவும், பின்னூட்டமும்
http://sundaravadivel.blogspot.com/2004/09/blog-post_109494170614323927.html#comments
Post a Comment
<< Home