வழிப்போக்கன்

வாழ்வெனும் வழித்தடத்தில் நான் காணும் காட்சிகள்

Sunday, October 03, 2004

ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று சொல்லி அலையும் அறிவிலிகாள்!!

ஒரு பிள்ளையார் ஊர்வலம். பெரிய பிள்ளையார். இந்த ஊர்ல கணேசா-ன்னு சொல்லுவாங்க. பிள்ளையாரு பொறந்த நாள கொண்டாடிட்டு அந்த சிலைய கரைக்க கொண்டு போய்டிருந்தாங்க. அப்போ யென்ஸ், தங்கமணி, நான் ஒரு ஆட்டோவில் போய்கொண்டிருந்தோம். வழியில் அந்த ஊர்வலக்குழுவினர் அந்த ஆட்டோவை மறித்து மிக மெதுவாக முன்னேறச் செய்தனர்.

அவர்கள் ஆடிக்கொண்டே ஆட்டோ-விற்க்குள் கையை நுழைத்து எங்கள் தலையை கலைப்பதும், சாயங்கள் பூசுவதும் என்று அத்து மீறத் துவங்கினர். எங்களின் செல்போன் மற்றும் பணப்பையை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. அவர்கள் நன்றாக உற்சாக பானம் செய்து இருந்தனர். ஊர்வலத்துக்கு பாதுகாப்பாக இரு போலிஸ்காரர்கள் வேறு.

இது எங்களுக்கு உண்டான ஒரு கசப்பான சம்பவத்தின் பதிவு. இத்தகைய சம்பவம் ஒரு மற்ற மத முறைகளை பின்பற்றும் நபருக்கு ஏற்பட்டால் அவர்களது மனம் எவ்வளவு தூரம் பாதிப்படையும்?. இதே செயல் ஒரு பெண்ணிற்கு ஏற்பட்டால் அவருக்கு நேரும் கதி என்ன?. இத்தகைய தாக்குதல்கள் ஆழமான மன காயங்களை உண்டாக்கும் அல்லவா?.

நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். இத்தகைய பிள்ளையார் ஊர்வலங்கள், பாதுகாவலரின் துணை கொண்டு, ஒருவரை கொள்ளையடிக்கும், மானபங்க படுத்தும் முயற்சியாக உருவாகும்போது, அவர் எங்கு செல்வார்?. நிச்சயமாக ஒரு ரஜினியாகவோ, விஜயகாந்தாகாவோ மாறி சண்டை இடுவது ஆகாது. தோன்றுவதை பகிர்ந்து கொள்ளுங்கள். (மைக்கேல் மூர் கூறும் அமெரிக்க வங்கியில் கணக்கை ஆரம்பிக்க வேண்டியதுதான் எனக் கூறாதீர்கள்)

-வழிப்போக்கன்