வழிப்போக்கன்

வாழ்வெனும் வழித்தடத்தில் நான் காணும் காட்சிகள்

Thursday, December 02, 2004

பார் போற்றும் பாரதத்திலே டிசம்பர் 2- 3 ம் தேதியினிரவினிலே.

ஆயிரக்கணக்கானோர் மடிந்தனர் இந்த இரவில். குழந்தைகள்- பெண்கள்-ஆண்கள்-முதியோர்-விலங்குகள் இவர்களிடையே ஏற்றதாழ்வின்றி நடைபெற்ற ஒரு காரியம். ஆம் காரியம்தான்.

சம்பவம்: போபால் விஷ வாயு கசிவு

அதன் பின் இவர்களில் பிழைத்தோருக்கு உதவியாம், நீதியாம். மிகப் பெரிய வேடிக்கை. இறந்தவர்களின் எண்ணிக்கை பதினைந்தாயிரத்திற்கும் மேல். இன்றளவும் இவர்களுக்கு தரப்பட்ட நிவாரணத்தொகை இந்திய ரிசர்வ் வங்கியிலே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகை கூட இவர்களுக்கு சலுகை என்று கொடுப்பவர்கள் சொன்னால் நவதுவாரங்களும் மூடப்பட்டு, தலையை ஆட்டும் ஓர் கூட்டம்.
எத்தனை பாரதிகள் தோன்ற வேண்டுமோ மக்கள் தம் நிலை உணர்ந்து கிளர்ந்தெள.
மேலும் விவரங்கட்கு


புஸ்சு கனடாவில் உரை நிகழ்த்தும் போது கூறுகின்றார்: "கனடியர்களே, உங்கள் பிரதமர் இரண்டாம் உலகப் போரின்போது, கனடாவில் தாக்குதல் நடக்காத போதும் போருக்கு படைகளை அனுப்பி, அதன் பின் அவர் கூறினார், எதிரிகள் நம்மை தாக்க வரும் வரையில் நாம் பொறுத்திருக்கலாகாது என்று"
அப்போ எனக்கு ஒரு கேள்வி: ஏனுங்க, எங்க ஊருக்குள்ளாற வந்து ஒரு இடத்த கட்டி, அதுல இருந்து விஷ வாயு வெளிப்பட்டு பதினஞ்சாயிரம் மக்க செத்து போச்சே, அதெல்லாம் என்னதுங்க? வெறும் விபத்தா? ஒரு மூவாயிரம் மக்க மேல ஏரோப்பிளேன விட்டா அது தீவிரவாதம். சரி. இதுக்கு என்னா சொல்வீங்கோ. இத ஏன் கேக்கறன்னா, உங்க ஊர்லயும் தான் கேஸ் நடந்து ஓடுங்கடான்னு முடுக்கி விட்டுடீங்களே அதுனால.(ஏதோ பதினாறாம் வட்ட செயலாளர், "நான் ஜார்ஜ் புஸ்சை கேட்கின்றேன்...".அப்படின்னு சொன்னமாதிரிதான் எனக்கு தோணிச்சு இத படிச்சுட்டு. ம்ஹூம்...)

1 Comments:

At December 2, 2004 at 2:22 PM, Blogger Thangamani said...

நல்லது பாலாஜி. நாம் போபால் விசவாயுவின் அழிவிலிருந்து எப்படி பாடம் கற்றுக்கொண்டோமென்றால், சில யாகங்களை செய்து பசுஞ்சாணத்தை எரித்த குடும்பம் நச்சுக் காற்றில் இருந்து பிழைத்துக்க்கொண்டதாகத்தான்.

இதுபோதாதா? இந்த அரிய கண்டுபிடிப்புக்கே, நாம் யூ.சிக்கு நன்றி சொல்லவேண்டும்.

 

Post a Comment

<< Home