வழிப்போக்கன்

வாழ்வெனும் வழித்தடத்தில் நான் காணும் காட்சிகள்

Sunday, October 03, 2004

ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று சொல்லி அலையும் அறிவிலிகாள்!!

ஒரு பிள்ளையார் ஊர்வலம். பெரிய பிள்ளையார். இந்த ஊர்ல கணேசா-ன்னு சொல்லுவாங்க. பிள்ளையாரு பொறந்த நாள கொண்டாடிட்டு அந்த சிலைய கரைக்க கொண்டு போய்டிருந்தாங்க. அப்போ யென்ஸ், தங்கமணி, நான் ஒரு ஆட்டோவில் போய்கொண்டிருந்தோம். வழியில் அந்த ஊர்வலக்குழுவினர் அந்த ஆட்டோவை மறித்து மிக மெதுவாக முன்னேறச் செய்தனர்.

அவர்கள் ஆடிக்கொண்டே ஆட்டோ-விற்க்குள் கையை நுழைத்து எங்கள் தலையை கலைப்பதும், சாயங்கள் பூசுவதும் என்று அத்து மீறத் துவங்கினர். எங்களின் செல்போன் மற்றும் பணப்பையை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. அவர்கள் நன்றாக உற்சாக பானம் செய்து இருந்தனர். ஊர்வலத்துக்கு பாதுகாப்பாக இரு போலிஸ்காரர்கள் வேறு.

இது எங்களுக்கு உண்டான ஒரு கசப்பான சம்பவத்தின் பதிவு. இத்தகைய சம்பவம் ஒரு மற்ற மத முறைகளை பின்பற்றும் நபருக்கு ஏற்பட்டால் அவர்களது மனம் எவ்வளவு தூரம் பாதிப்படையும்?. இதே செயல் ஒரு பெண்ணிற்கு ஏற்பட்டால் அவருக்கு நேரும் கதி என்ன?. இத்தகைய தாக்குதல்கள் ஆழமான மன காயங்களை உண்டாக்கும் அல்லவா?.

நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். இத்தகைய பிள்ளையார் ஊர்வலங்கள், பாதுகாவலரின் துணை கொண்டு, ஒருவரை கொள்ளையடிக்கும், மானபங்க படுத்தும் முயற்சியாக உருவாகும்போது, அவர் எங்கு செல்வார்?. நிச்சயமாக ஒரு ரஜினியாகவோ, விஜயகாந்தாகாவோ மாறி சண்டை இடுவது ஆகாது. தோன்றுவதை பகிர்ந்து கொள்ளுங்கள். (மைக்கேல் மூர் கூறும் அமெரிக்க வங்கியில் கணக்கை ஆரம்பிக்க வேண்டியதுதான் எனக் கூறாதீர்கள்)

-வழிப்போக்கன்

2 Comments:

At October 3, 2004 at 10:00 PM, Blogger Thangamani said...

இந்த மாதிரியான ஊர்வலங்களில் ஆடிக்கொண்டும், மதக்கலவரங்களில் அடியாட்களாக தாக்குதலில் ஈடுபட்டு மதவெறி மேல்சாதி நம்பிக்கைகளுக்கு பலியாவோர் அடித்தட்டு மக்கள், பிற்ப்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் தான். சமய, சமுதாய தளங்களில் அவர்களுக்கு கிட்டாத அங்கீகாரத்தை, இப்படிப்பட்ட மேல் சாதி (வர்க்கத்தினர்) தூண்டி நடத்தும் ஊர்வலங்கள், கலவரங்கள் இவற்றில் ஈடுபடுவதன் மூலம் அடைகின்றனர். இந்த அங்கீகாரம் கோரும் முயற்சியின் மூலம் அவர்கள் தங்கள் மேல இச்சமூகம் பலகாலமாக செலுத்தி வந்திருக்கும் வன்முறைக்கு எதிர்வினையாற்றுகின்றனர். இந்த பதில் வன்முறையை ஆதிக்க சாதிகள், வர்க்கத்தினர் தம்முடைய எதிரிகளின் மீது திருப்பிவிடுவதன் மூலம் இரட்டை வெற்றியைப் பெறுகின்றனர்.
குஜராத்தில், கலவரங்களில் ஈடுபட்டவர்கள் அதுவரை, பழங்குடியினர் என்றும், தாழ்த்தப்பட்டவர்கள் என்றும், ஒதுக்கிவைகப்பட்டவர்கள் என்பதும், இவர்களில் பலர் பொருளாதரீதியாக வலுவிலந்தவர்கள், வேலையிழந்தவர்கள். ஆனால் இவர்கள் முஸ்லீம்கள் வீடுகளில் இருந்து கொள்ளையடித்து வந்த டீவி, ப்ரிட்ஜ் போன்றவைகளை மேல்சாதியினரே குறைந்த விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்கள் என்பது மேல்சாதியினரே இவ்விதக் கலவரங்களை நடத்துபவர்கள் என்பதற்கும், அதனால் பயன் பெறுபவர்கள் என்பதற்குமான ஒரு பெளதீக சாட்சியமாக இருக்கிறது. மத ஊர்வலங்கள், கலவரங்கள் மூலம் இந்த ஆதிக்க சாதியினர் பெறும் ஆகப்பெரிய லாபம், வெற்றி மற்ற மத மக்களை, நடுநில்லையாளர்களை அச்சுறுத்துவதல்ல; மாறாக இந்த தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை தமது கட்டுக்குள்ளேயே வைத்திருப்பதுதான்.

 
At December 20, 2004 at 3:25 AM, Blogger வீரமணிஇளங்கோ said...

என் பதிவுக்கு வந்து பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி.

வீரமணி இளங்கோ

 

Post a Comment

<< Home