அனாதை ஆனந்தன் கூறிய கருத்துக்கள் தொடர்பாக...
இப்பதிவிற்கு சுட்டிகள் வழங்கிய ரவி ஸ்ரீநிவாஸுக்கு என் நன்றிகள்.
அனாதை ஆனந்தன் தனது பதிவில் எவ்வாறு வர்ண பேதங்கள் தங்களுக்குள் இணைந்து தலித் மக்களின் நிலையை கட்டுபடுத்துகின்றது என்பதை கூறி இருந்தார். இதில் என் சந்தேகங்களுக்கு தக்க விளக்கம் அளிக்கும் வகையில் சில சுட்டிகளையும், சில புள்ளி விவரங்களையும் தந்திருந்தார்.
சமீபத்தில் நடை பெற்ற ஒரு மாநாட்டில் அநாதை ஆனந்தனின் கருத்துக்களின் நோக்கில் சில ஆய்வு கட்டுரைகள் வாசிக்கப்பட்டிருந்தது என்று அறிந்தேன். இதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விளைகின்றேன். இந்த ஆய்வுகளின் பின்புலம் உடனடியாக தெரியாவிட்டாலும் இத்தகைய ஆய்வுகள் எப்படி மேற்கொள்ளப்படுகின்றது, இவை எதை நோக்கி செல்கின்றன என்பது தெளிவாகின்றது.
இந்த ஆய்வுகளின் முழு கட்டுரையும் கிட்டவில்லை. கட்டுரை சுருக்கம் மட்டுமே கிடைத்தது.
இந்த கருத்தரங்கில் நான்கு கட்டுரைகள்வாசிக்கப்பட்டது என அறிகின்றேன். முதல் கட்டுரையில், எவ்வாறு சொத்துள்ள நடுத்தர மக்களின் ஆதரவை பிஜேபி பெற்றது, மேலும் க்ஷத்ரியர்கள் மற்றும் படிடர்கள் (இவர்களை பற்றி என்னிடம் தகவல் இல்லை, தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளவும்) எவ்வாறு பிஜேபி துணை நின்றனர் என்பதை பற்றிய ஒரு கண்ணோட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, அநாதை ஆனந்தன் கூறிய வழியில் ஓடும் சிந்தனையாகப்பட்டது.
இரண்டாவது கட்டுரையில், எவ்வாறு பிராந்தியத்துவம் குஜராத்தின் வகுப்பு வாத உணர்வோடு நயமாக பிணைக்கப்பட்டது என்பதை நிறுவுகின்றது. இது எனக்கு ஒரு புதிய செய்தியாக இருந்தது.
மூன்றாவது கட்டுரையில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி எவ்வாறு அடித்தட்டு மக்களின் ஆதரவை திரட்டியது என்பதான கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்காவது கட்டுரையில், காந்தி குறித்தும், அவர் தனது இருப்பிடத்தில் இருந்து எவ்வாறு விலக்கப்பட்டார் என்பதை பற்றியும் ஒரு கருத்து கூறப்பட்டுள்ளது. எனக்கு இந்த கட்டுரை ஒரு நிறைவாக படவில்லை.