வழிப்போக்கன்

வாழ்வெனும் வழித்தடத்தில் நான் காணும் காட்சிகள்

Monday, February 14, 2005

ப்ளாக் ஒன்று கண்டேன்!!

http://blog.lib.umn.edu/j-jagu/nanotechnology/
இந்த தொடுப்பு எனது ஆய்வுக்காக நெட்-டை குடைந்து கொண்டிருந்த போது கிடைத்தது. என்னை வியப்புக்குள்ளாக்கியது என்னவென்றால், மினசோட்டா பல்கலைகழக நூலகம் தனது server-ல் blog-ஐ உருவாக்கி அதை ஒரு தகவல் திரள் களமாக பயன்படுத்துவதுதான். எனது குழு தலைவர் எங்கள் குழுவிற்கு ஒரு இணையதளம் செய்வது பற்றி சிந்திக்குமாறு கூறினார். இந்த blog-ஐ பார்த்தவுடன் ஏன் அது ஒரு blog-ஆக இருக்க கூடாது என தோன்றியது. இவ்வாறு ப்ளாக்காக வைக்கும் பட்சத்தில், இதில் உடனுக்குடன் post-செய்யவும் இயலும் எனத் தோன்றுகின்றது. எனக்கு இது தொடர்பாக ஏதேனும் மேல் விவரங்கள் (அஃது) இதில் உள்ள குறைகள் மற்றும் நலன்கள் பற்றி கூற இயலுமா?. இந்த மாதிரி ஒரு ப்ளாக் செய்த பின் அதை எங்கள் பல்கலைகழக server-ல் இடும் வசதி உள்ளது. suggestions please.....
PS: ப்ளாக்குகள் எப்படியெல்லாம் பயன் படுகின்றன என்று நினைத்தால் மலைக்காமல் இருக்க முடியவில்லை.

பாலாஜி-பாரி