வழிப்போக்கன்

வாழ்வெனும் வழித்தடத்தில் நான் காணும் காட்சிகள்

Friday, September 24, 2004

வாழ்த்துவோம் இவர்களை!!

இது சுட்டி விகடனில் வந்த செய்தி. கூட்டு முயற்சியாக ஒரு கதை எழுதிய இச்சுட்டி குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்!!

வழிப்போக்கன்

Thursday, September 09, 2004

Pariah

எனது புரிதல் இது காறும் பறை என்ற தாள வாத்தியத்தை இசைக்கும் அல்லது முன்னாளில் இசைத்த நபர்களையும் அவர்கள் சார்ந்த சமூகத்தையும் குறிக்கும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் இணைய தளத்தில் ஓர் கட்டுரையை படிக்கும் பொழுது "pariah" என்ற வார்த்தையை கண்டேன். இதன் அர்தத்தை webster-ல் காணும் போது இதன் பொருளைக் கண்டு துணுக்குற்றேன். (காண்க கீழேயுள்ள படம்)
எவ்வாறு இந்த வார்த்தை உருவாகியிருக்க வேண்டும் என்ற சிந்தனை, பல கேள்விகளை எழுப்பியது.

நிச்சயமாக எந்த ஒரு சமூகமும் தங்களை outcast என்று கூறிக் கொள்ள மாட்டார். ஆங்கிலேய அகராதி ஆக்கர்களுக்கு இச்சொல் யார் மூலம் சென்றிருக்க வேண்டும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மேல்சாதியர்களின் ஆதிக்கம் எவ்வாறு பல தளங்களில் பரவி இருந்தது என்பது தெரிந்தாலும், ஒரு மொழியிலிலும் (இதை இந்த விசயத்தினால் அறிவுபூர்வமானது என்பதை ஆராய்ந்துதான் ஏற்றுக் கொள்ள வேண்டும்) தங்களது ஆதிக்க மனோபாவத்தை நிறுவ வெட்கப்படாமல் இருந்துள்ளனர் என்று தெரிகின்றது.

பறையறிவிப்பவர்களைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் புறநானுற்றில் இருக்கின்றது. அக்கால தமிழ்ச் சமூகம் அவர்களுக்கு நிச்சயமாக "outcast" என்ற அடை மொழியை வழங்கவில்லை. மாறாக இயல்பான அவர்களது சீரிய பண்புகளை கண்டுணர்ந்தது. அப்பண்புகளை பாடல்கள் மூலம் நிலை நிறுத்தவும் செய்தது.

நாங்கள் இங்கு அப்பறையை கொட்டி அடித்த போது (ஒரு தமிழ் பேரவை விழாவில் தப்பாட்டத்தின் போது), பறையறிவித்தவர்களின் அவலமும் அதன் வழியே ஊடாடியதாக இன்று நான் நினைக்கின்றேன்

எப்படி ஒரு மனித சமூகம் தன்னில் இருந்து மற்றொருவரை காரணமே இல்லாமல் "outcast" என்று மற்றவர்களை சொல்ல வைக்க துணிவு பெற்றது?

-வழிப்போக்கன்

முகமூடி அல்ல!!

நான் உங்களில் சிலருக்கு முன்பே அறிமுகமான (பாலாஜி) பாரி.
இந்த வலைக்குறிப்பில் அனைத்து பதிவுகளும் வழிப்போக்கன் என்ற என் புனை பெயர் கொண்டு இருக்கும். நான் வேறெங்கும் இந்த புனை பெயரில் எழுதவில்லை.

பாரி

வணக்கம்

வாழ்வெனும் வழித் தடத்திலே நான் காணும் நிகழ்வுகள் குறித்தான விடயங்களும் அதன் பின்னனிகளும் இங்கே உங்கள் முன்.


அன்புடன்
வழிப்போக்கன்